அமைச்சர் ராஜித பொய்யின் பிறப்பிடம்; நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த

🕔 June 10, 2017

லங்கை  அரசியலில் அமைச்சர் ராஜிதவையும் அவரது மகன் சதுர சேனாரத்னவையும் போன்ற பொய்யர்கள்இருக்க முடியாது என்று, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவர்கள் இருவரும் பொய்யின் பிறப்பிடம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொது பல சேனாவை நோர்வே உருவாக்கியதாக மஹிந்த அரசாங்கத்தில் கூறிய ராஜித, முன்னாள் பாதுகாப்பு செயலாளர்தான் பொதுபலசேனாவை உருவாக்கினார் என்று அண்மையில் கூறினார்.

இப்போது, நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர்தான் ஞானசார தேரரை  பாதுகாப்பதாக அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடக  சந்திப்பில் கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் ஞானசார தேரரை கைது செய்ய நீதிமன்ற பிடியாணை வழங்கப்படாத நிலையில், அது தொடர்பிலும் அவர் பொய்  கூறியுள்ளமை இப்போது அம்பலமாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டன் பிரியசாத் எனும் வாலிபர் கைதான போது, அவர் நாமல் ராஜபக்ஷவின் நில்பலகாயவை (நீலப்படையணி) சேர்ந்தவர் என கூறி பின்னர் மூக்குடைந்து கொண்டார்.

Comments