அரசியலில் மாற்றம் ஏற்படவுள்ளது, அதுவும் ஒரு வாரத்தில்: நம்பிக்கை வெளியிடுகிறார் நாமல்

🕔 September 5, 2017

திர்வரும் வாரத்தில் அரசியலில் மாற்றமொன்று நிகழவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆளும் தரப்பிலுள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிணைந்த எதிரணியுடன் இணையவுள்ளமை காரணமாகவே அரசியல் மாற்றம் ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து ஒன்றிணைந்த எதிரணியினர் விரிவானதொரு கூட்டணியினை உருவாக்கி, எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், இந்தக் கூட்டணியில் இணைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்