ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுங்கள் என்றுதான், நாங்களும் கூறுகிறோம்: நாமல்

🕔 July 7, 2017

டந்த கால ஊழல்கள் பற்றிய விசாரணைகள் தொடர்பில், விமர்சனம் முன்வைக்கும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவர் மீது மேற்கொள்ளப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யப்படாமல் உள்ளமை தொடர்பில், மௌனமாக இருப்பது வேடிக்கான விடயம் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் மேற்கண்ட விடயத்தைக் கூறினார்.

அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“ஊழல் மோசடி விசாரணைகள் தொடர்பில், ராஜித சேனாரத்ன கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். நாமும் அதே விடயத்தைத்தான் தொடர்ச்சியாக கூறுகிறோம். ஊழல் விசாரணைகள் ஒரு பக்கச் சார்பாகவே இடம்பெறுகின்றன. கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக மட்டுமே விசாரணைகளை முன்னெடுக்கிறார்கள்.

இந்த அரசாங்கத்தில் மத்திய வங்கி கொள்ளையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில், எதுவித பக்கச்சார்பற்ற விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. ராஜித சேனாரத்னவுக்கு எதிராகவும் பல முறைப்பாடுகளை நாம் மேற்கொண்டுள்ளோம். இது தொடர்பில், இதுவரை எதுவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ‘டொப் ரென்’ என்ற தலைப்பில் பலருக்கு எதிராக நாம் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளோம். இந்த விடயங்களையும் எவரும் கண்டுகொள்ளவில்லை.

நாட்டில் தற்போது இடம்பெறுவது பொம்மையாட்சியாகும். தங்களின் தவறுகளை மறைக்கவே, எமது காலத்தில் ஊழல் இடம்பெற்றதாக, விசாரணை நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்