சாதனை படைத்தது மஹிந்தவின் கூட்டம்; கலந்து கொண்டோர் எண்ணிக்கை 01 லட்சத்துக்கும் அதிகம்

🕔 May 2, 2017

ஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினரின் மே தினக் கூட்டத்தில் 01 லட்சத்துக்கும் அதிகமான ஆதரவாளர்கள் பங்கேற்றிருந்ததாக புலனாய்வுப் பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இலங்கையில் நடைபெற்ற மே தின கூட்டங்களில், மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டத்திலேயே, அதிகளவான மக்கள் கலந்து கொண்டதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியின் மே தின கூட்டம், கொழும்பு காலிமுகத் திடலில் இடம்பெற்றது.

எவ்வாறாயினும், மஹிந்தவின் மே தினக் கூட்டத்தில் 01 லட்சம் முதல் 01 லட்சத்து 10 ஆயிரம் வரையிலானவர்கள் கலந்து கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்