வீட்டிலிருந்த எம்.பி.களை அழைத்து வருவதற்காகவே, வாக்களிப்பு நேரம் தாமதிக்கப்பட்டது

🕔 September 20, 2017

வீட்டிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் பொருட்டு அழைத்து வருவதற்காகவே, வாக்களிக்கும் நேரத்தினை காலதாமதப்படுத்தியதாக ஒன்றிணைந்த எதிரணியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேற்படி சட்டமூலத்துக்கான வாக்கெடுப்பு இன்று இரவு 6.30 மணியளவில் இடம்பெறுவதாக இருந்தது. ஆனாலும், 8.30 மணிவரை வாக்கெடுப்பு நடவடிக்கை காலதாமதப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், வீட்டிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து வந்து, மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதற்காகவே, இவ்வாறு வாக்களிப்பு நேரம் இழுத்தடிக்கப்பட்டதாக, ஒன்றிணைந்த எதிரணியினர் குற்றம்சாட்டினர்.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்