அரசாங்கத்துக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது; அதுவும் இரண்டு மாதத்தில்: மிரட்டுகிறார் மஹிந்த

🕔 July 21, 2017

ரசாங்கத்திலுள்ள மிகப்பெரிய குழுவொன்று விரைவில் தம்முடன் இணையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்னும் இரண்டு பௌர்ணமி முடிந்த பின்னர், அதிர்ச்சி காத்திருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் ஒரு குழுவினர் இணையவுள்ளனர் எனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்புச் சபையில் ஓர் அணி இருந்து கொண்டும், மற்றொரு அணி அச்சபையிலிருந்து வெளியேறியும், புதிய அரசியல் அமைப்பை தடுப்பதே தமது திட்டம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டம், கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்றது. அதன்போதே அவர் இதனைக் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்