அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் திண்மக் கழிவகற்றும் நடவடிக்கை இடைநிறுத்தம்: 14200 குடும்பங்கள் பாதிப்பு 0
– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில், திண்மக் கழிவகற்றல் நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, இந்த நிலை ஏற்பட்டுள்ளது என – அட்டாளைச்சேனை பிரதேச சபை கூறியுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் 49475 சனத் தொகையையுடைய 32 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டதாகும்.