நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரீஸ், முஷாரப் ரத்துச் செய்ததாக கூறிய ஆசிரியர் இடமாற்றங்கள்; எதுவும் நடக்கவில்லை: கச்சேரி முன்னால் ஆர்ப்பாட்டம்

🕔 February 14, 2024

– பாறுக் ஷிஹான் –

கிழக்கு மாகாணக் கல்வி திணைக்களம் அண்மையில்  வெளியிட்ட ஆசிரியர் இடமாற்ற பட்டியலை ரத்து செய்ய  கோரி,  கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய ஆசிரியர்கள் – அம்பாறை மாவட்ட செயலகம் முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை  இன்று (14) மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக – இன்று அம்பாறை மாவட்ட செயலகத்துக்கு வருகை தந்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ்  சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப்  ஆகியோரை  ஆசிரியர்கள் சந்தித்து தங்களுடைய பிரச்சினைகளை எடுத்து கூறி மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

குறித்த மகஜரை பெற்றுக்கொண்ட  இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உரிய  விடயத்தை எடுத்து சென்று  நியாயமான தீர்வு ஒன்றினை பெற்றுத்தருவதாக உறுதி அளித்தனர். 

அம்பாறை மாவட்ட ஆசிரியர்களுக்கு வெளிமாவட்டங்களுககு வழங்கப்பட்ட இடமாற்றங்களை, கிழக்கு மாகாண ஆளுநருடன் பேசி தாமே ரத்துச் செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மற்றும் முஷாரப் ஆகியோர் ஏட்டிக்குப் போட்டியாக சமூக ஊடகங்களில் பகிரங்கமாகத் அறிவித்திருந்த நிலையிலேயே, ஆசிரியர்கள் இவ்வாறு இடமாற்றங்களை ரத்துச் செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இடமாற்றம் ரத்துச் செய்யப்பட்டதாக – ஹரீஸ் எம்.பி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்