அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் புதிய நிர்வாகம், வக்பு சபையில் பதிவானது

🕔 February 21, 2024
பள்ளிவாசல் தலைவர் – விரிவுரையாளர் ஹனீஸ் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்

– அஹமட் –

ட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் புதிய நிர்வாக சபை (பரிபாலன சபை) – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழுள்ள வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்குரிய கடிதத்தை புதிய நிர்வாக சபையின் தலைவர் – சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல்.எம். ஹனீஸ் – இன்று (21) கொழும்பிலுள்ள வக்பு சபை அலுவலகத்தில் பெற்றுக் கொண்டார்.

20 ஜனவரி 2024ஆம் ஆண்டிலிருந்து 03 ஆண்டுகளுக்கு செயற்படும் வகையில் புதிய நிர்வாக சபை பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல்.எம். ஹனீஸை தலைவராகக் கொண்டு, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் புதிய நிர்வாகம் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட நிலையில், முறையற்ற ரீதியாக பெரிய பள்ளிவாசலின் நிர்வாகத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் பொருட்டு, சிலர் குறுக்கு வழியில் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

ஆயினும் முறையாகத் தெரிவு செய்யப்பட்ட நிர்வாக சபையை வக்பு சபை ஏற்றுக் கொண்டு, அதனை சட்ட வலுப்படுத்தும் வகையில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் புதிய தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் ஹனீஸ்

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபைத் தெரிவு; ‘சோலி பிரட்டும்’ சிறுபிள்ளைத்தன விளையாட்டுக்கள் ஒருபோதும் சரி வராது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்