கிழக்கு மாகாண முஸ்லிம் நிர்வாக அதிகாரிகளை கொச்சைப்படுத்தி பேசிய முஷாரப் எம்.பிக்கு, மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அமீர் கண்டனம்

🕔 March 2, 2024

– கே.ஏ. ஹமீட் –

கிழக்கு மாகாணத்தில் நிருவாக ரீதியாக புறக்கணிக்கப்படும் அதிகாரிகள் முஸ்லிம்தகுதியற்றவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ முஷாரப் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக அ.இ.ம.காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏ.கே. அமீர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;

“அட்டாளைச்சேனையிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு – பல்வேறு கேள்விகளுக்கும் பதில் வழங்கினார்.

இதன்போது, கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் நிருவாக சமநிலையற்ற தன்மைகள் தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் கேள்விகள் எழுப்பினர்.

கிழக்கு மாகாணத்தில் தீர்மானம் மேற்கொள்ளும் எந்த பதவி நிலையிலும் எவரும் இல்லை என்பதையும், பல்வேறு முக்கிய பதவி நிலைகளுக்கு முஸ்லிம் நிருவாகிகள் உள்ளவாங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டிய ஊடகவியலாளர்கள், ‘இதற்கு ஏன் நீங்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை’ என்று கேட்டிருந்தனர்.

அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கிய பதிலானது – நிருவாக ரீதியில் சிரேஷ்டத்துவம் மிகுந்தவர்கள் அந்தப் பதவிக்கு பொருத்தமற்றவர்கள், ஆளுமையற்றவர்கள் என கூறியிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியதாகும்” என, அமீர் கூறினார்.

”கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் முஸ்லிம் சிரேஷ்டத்துவம் மிக்கவர்களை முஷாரப் எம்.பி அவமானப்படுத்தியிருப்பதாகவே அவரின் பதில் ஊடாக புரிந்து கொள்ளமுடிகின்றது. தத்தமது சுயநலங்களுக்கு எமது சமூகத்தையும், சமூகத்திலுள்ள சிரேஷ்டத்துவம் மிகுந்த உயர் அதிகாரிகளையும் பலிகொடுப்பதாகவே இந்த கருத்து அமைந்துள்ளது” எனவும் அமைப்பாளர் அமீர் மேலும் தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர் முன்னிலையில், கிழக்கு மாகாணத்தில் நடக்கும் இந்த இனவாத செயற்பாடு தொடர்பில் அமீர் கண்டனம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: “கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் முஸ்லிம்களைப் பழிவாங்குகின்றார்”: மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அமீர் குற்றச்சாட்டு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்