கிழக்கு மாகாண மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக அட்டாளைச்சேனை றிம்சான் நியமனம்

🕔 February 26, 2024

– அபு அலா –

கிழக்கு மாகாணத்தின் மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எம்.எம். றிம்சான் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண மட்டத்தில் 2015/2016 ல் இடம்பெற்ற சிறந்த உற்பத்தித்திறன் போட்டியில், மாகாண மட்ட மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்டவியலாளர் (MLT) பிரிவில் இவர் முதலாம் இடத்தையடைந்தார். இதனையடுத்து மாகாண மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக பதவியுர்வு பெற்று அவருக்கான நியமனக் கடிதத்தையும் பெற்றுக்கொண்டார்.

அவர் தனது கடமையினை இன்று (26) களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் பொறுபேற்கின்றார்.

இவர் மருத்துவ ஆய்வுகூட 2008ஆம் ஆண்டு மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளராக நியமனம் பெற்று தொடர்ச்சியாக கடமையாற்றி வருகின்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்