அட்டாளைச்சேனையின் பிரதேச செயலாளராக இர்பான் நியமனம்

🕔 February 20, 2024

– முன்ஸிப் அஹமட் –

ட்டாளைச்சேனையின் புதிய பிரதேச செயலாளராக பி.ரி.எம். இர்பான் இன்று (20) கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

திம்புலாகல பிரதேச செயலாளராக 06 வருடங்கள் கடமையாற்றிய நிலையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக இர்பான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது இளமாணி மற்றும் முதுமாணி பட்டங்களைப் பெற்றுள்ளார்.

ஓட்டமாவடியைச் சேர்ந்த இவர் அக்கரைப்பற்று மத்திய கல்லூரியிலும் கற்றுள்ளார்.

இந்த நிலையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த எம்.ஏ.சி. அஹமட் சாபிர், அம்பாறை மாவட்ட செயலகத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்