கடலில் காணாமல் போன சாய்ந்தமருது மாணவர்கள் ஜனாஸாகளாக மீட்பு

🕔 February 17, 2024

பாறுக் ஷிஹான்

நிந்தவூர் பகுதி கடலில் காணாமல் போன – சாய்ந்தமருதைச் சேர்ந்த இரண்டு மாணவர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

நிந்தவூர் – ஒலுவில் எல்லைக் கடலோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சாய்ந்தமருதைச் சேர்ந்த 08 மாணவர்களில் இருவர் – கடல் நேற்று (16) அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயினர்.

இதனையடுத்து அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் நேற்று இரவு 9.00 மணி வரையில் இடம்பெற்றன.

இந்த நிலையில் காணாமல் போன மாணவர்களின் உடல்கள் இன்று (17) காலை  கரையொதுங்கின.

மாளிகைக்காடு- சாய்ந்தமருது பகுதியை  சேர்ந்த 08 மாணவர்கள் கடற்கரையில் புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது, அவர்களில் இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டிருந்தனர்.

13-15 வயதுக்குட்பட்ட 08  பாடசாலை  மாணவர்கள் – நேற்று தொழுகையை முடித்துக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர்- ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்றிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்