Back to homepage

மேல் மாகாணம்

ஹக்கீம் எனும் பூதத்தை அடக்க, வாக்கு எனும் வேப்பிலைக் கொத்தால் அடிக்க வேண்டும்: பசீர் சேகுதாவூத்

ஹக்கீம் எனும் பூதத்தை அடக்க, வாக்கு எனும் வேப்பிலைக் கொத்தால் அடிக்க வேண்டும்: பசீர் சேகுதாவூத் 0

🕔25.Dec 2017

– அஹமட் –ஹக்கீம் எனும் சுய நலப் பூதத்தை அடக்கி, மக்களின் காலடிக்கு மீண்டும் கொண்டு வருவதற்கு, இந்தத் தேர்தலில் வாக்குகள் எனும் வேப்பிலைக் கொத்தால், மக்கள் அடிக்க வேண்டும் என்று, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் கோரிக்கை விடுத்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸை அழிப்பது  தமது நோக்கமல்ல என்றும்,  அந்தக் கட்சியை

மேலும்...
இலங்கைத் தேயிலை விவகாரம்: இறக்குமதித் தடையை நீக்கியது ரஷ்யா

இலங்கைத் தேயிலை விவகாரம்: இறக்குமதித் தடையை நீக்கியது ரஷ்யா 0

🕔25.Dec 2017

இலங்கையிலிருந்து தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா விதித்திருந்த தடையினை நீக்குவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கிணங்க, இம்மாதம் 30ஆம் திகதியிலிருந்து குறித்த தடை நீக்கப்படும் என்று, ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத்துறை அமைச்சு, இலங்கை தேயிலை சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் ரஷ்யாவுக்குச் சென்று, அந்த நாட்டு அரசாங்கத்துடன் நடத்திய

மேலும்...
சம்பந்தனைச் சந்தித்து நலம் விசாரித்தார் மஹிந்த; நாமலும் உடன் சென்றார்

சம்பந்தனைச் சந்தித்து நலம் விசாரித்தார் மஹிந்த; நாமலும் உடன் சென்றார் 0

🕔25.Dec 2017

திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்ட எதிர்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், இன்று திங்கட்கிழமை வீடு திரும்பியுள்ளார் எனத் தெரியவருகிறது. முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர், இன்று காலை வைத்தியசாலைக்குச்செ  சென்று, சம்பந்தனைச் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். திருகோணமலையில் வைத்து திடீரென

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஜனவரி 25, 26ஆம் திகதிகளில் இடம்பெறும்

உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஜனவரி 25, 26ஆம் திகதிகளில் இடம்பெறும் 0

🕔25.Dec 2017

உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, எதிர்வரும் ஜனவரி மாதம் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்புக்காக அரச உத்தியோகத்தர்கள் விண்ணப்பித்து, அவை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்குமாயின், மேற்கூறப்பட்ட திகதிகளில், வாக்களிக்க முடியும் என, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள

மேலும்...
ராஜாங்க அமைச்சர் ரங்க பண்டாரவை, உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்துமாறு, பொலிஸ் ஆணைக்குழு சிபாரிசு

ராஜாங்க அமைச்சர் ரங்க பண்டாரவை, உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்துமாறு, பொலிஸ் ஆணைக்குழு சிபாரிசு 0

🕔24.Dec 2017

தற்போதைய ராஜாங்க அமைச்சரும் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தருமான பாலித ரங்க பண்டாரவை, உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்துமாறு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. ஓய்வு பெற்ற உதவி பொலிஸ் பரிசோதகராக பணியாற்றிய போது, பாலித ரங்க பண்டார ஓய்வு பெற்று, அரசியலுக்குள் நுழைந்தார். இந்த நிலையில், தான் பொலிஸ் சேவையில் கடமையாற்றிய போது, அரசியல் பழிவாங்கலுக்கு

மேலும்...
காலநிலை குறித்து அவதானமாக இருக்குமாறு, மீனவர்களுக்கு எச்சரிக்கை

காலநிலை குறித்து அவதானமாக இருக்குமாறு, மீனவர்களுக்கு எச்சரிக்கை 0

🕔24.Dec 2017

நாட்டின் கிழக்கு கடல் பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதுவேளை, நான்டின் சில பகுதிகளிலும் மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, வடக்கிலிருந்து – கிழக்கு திசை நோக்கி, மணிக்கு 30 தொடக்கம் 40 கிலோமீற்றர் வேகத்தில், நாட்டின் கடற் பகுதிகளில் காற்று வீசும்

மேலும்...
தேர்தல் சட்டங்களை மீறிய 15 பேர் கைது

தேர்தல் சட்டங்களை மீறிய 15 பேர் கைது 0

🕔24.Dec 2017

தேர்தல் சட்டங்களை மீறிய 15 பேர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யப்படும் காலகட்டத்தில் இவர் கைது கைது செய்யப்பட்டனர். பொலிஸாருக்கு கிடைத்த 16 முறைப்பாடுகளுக்கிணங்க இவர்கள் கைதாகினர். தவறான நடத்தை மற்றும் தாக்குதவற்கு முயற்சித்தமை போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும்...
உள்ளுராட்சி தேர்தல் வேட்பாளர்களில், மாடு திருடர்கள் உள்ளிட்ட குற்றவாளிகள் உள்ளனர்: பெப்ரல் தெரிவிப்பு

உள்ளுராட்சி தேர்தல் வேட்பாளர்களில், மாடு திருடர்கள் உள்ளிட்ட குற்றவாளிகள் உள்ளனர்: பெப்ரல் தெரிவிப்பு 0

🕔23.Dec 2017

உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் மாடு திருடர்கள் உள்ளிட்ட குற்றவாளிகள் இருப்பதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கொள்ளையர்கள், நிதி மோசடியாளர்கள், போதை மாத்திரை கடத்தல்காரர்கள் மற்றும் மாடு திருடர்கள் உள்ளடங்கலாக பலர் வேட்பாளர்களாக உள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். பெப்ரல் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்த விபரம் தெரியவந்துள்ளது. இவ்வாறான

மேலும்...
அஸ்பெட்டாஸ் கூரைத் தகடுகளுக்கு 55 நாடுகளில் தடை; இலங்கை இறக்குமதி செய்ய தீர்மானம்

அஸ்பெட்டாஸ் கூரைத் தகடுகளுக்கு 55 நாடுகளில் தடை; இலங்கை இறக்குமதி செய்ய தீர்மானம் 0

🕔22.Dec 2017

அஸ்பெட்டாஸ் கூரைத்தகடுகளுக்கு 55 நாடுகள் தடை விதித்துள்ள நிலையில், அதனை இறக்குமதி செய்வதற்கு இலங்கை தீர்மானித்துள்ளமையானது, பல்வேறு மட்டங்களிலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அஸ்பெட்டாஸ் கூரைத்தகடுகளுக்கு தடை விதித்துள்ள நாடுகளில், ஐரோப்பிய ஒன்றியமும் உள்ளடங்குகிறது. 1900 ஆண்டின் ஆரம்பத்தில் அஸ்பெட்டாஸ் சுரங்கத்தினுள் வேலை செய்த பணியாளர்கள், அதிகளவில் இறந்தமையினை அடுத்து, அஸ்பெட்டாஸுக்கு தடை விதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அஸ்பெட்டாஸிலிருந்து

மேலும்...
அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தமைக்காக, இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார், அமைச்சர் றிசாட்

அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தமைக்காக, இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார், அமைச்சர் றிசாட் 0

🕔22.Dec 2017

  ஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா அறிவித்தமையை நிராகரிக்கும், ஐ.நா. பொதுச்சபையின் தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கை அரசாங்கம் வாக்களித்தமைக்காக, அமைச்சர் றிசாட் பதியுதீன் நன்றி தெரிவித்தார். கிழக்கு ஜெருசலத்தை, பலஸ்தீன் நாட்டின் தலை நகராக ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இலங்கை அரசாங்கத்துக்கு

மேலும்...
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், வைத்தியசாலையில் அனுமதி

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், வைத்தியசாலையில் அனுமதி 0

🕔22.Dec 2017

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன், நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். திருகோணமலையில் நேற்று கட்சி தொடர்பான நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும், அதனையடுத்து அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகவும் தெரியவருகிறது. இதனையடுத்து கொழும்பு வந்தடைந்த சம்பந்தன், சிகிச்சைகளுக்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர்

மேலும்...
அஷ்ரஃப்பின் மரணத்தினுடைய முழுமையான பெறுபேற்றை, ஐ.தே.கட்சி அனுபவிக்கிறது:  பசீர் சேகுதாவூத் கவலை

அஷ்ரஃப்பின் மரணத்தினுடைய முழுமையான பெறுபேற்றை, ஐ.தே.கட்சி அனுபவிக்கிறது:  பசீர் சேகுதாவூத் கவலை 0

🕔22.Dec 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அர்ப்பணிப்புள்ள செயலாளர் இல்லாமல் செய்யப்பட்டமையும், தலைவரின் அரசியல் தீர்மானங்களுக்கு மாற்று அபிப்பிராயங்களைத் தெரிவித்து கட்சியை சமநிலைக்கு கொண்டுவரும் ஆலோசகர்கள் அப்புறப்படுத்தப்பட்டமையுமே, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக் காலத்தில் கட்சி அனர்த்தத்துக்கு உள்ளானமைக்கான பிரதான காரணமாகும் என்று, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், ஐக்கிய சுதந்திர கூட்டணியின் தற்போதைய தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். மேலும், வழக்கொன்றின்

மேலும்...
இரண்டரைக் கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள்; பொலிஸாரிடம் சிக்கின

இரண்டரைக் கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள்; பொலிஸாரிடம் சிக்கின 0

🕔22.Dec 2017

சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட மாத்திரைகளின் பெறுமதி, சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேற்படி மாத்திரைகள் பேலியகொட பகுதியில் கைப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
லிற்றோ நிறுவன முன்னாள் தலைவரின் கோரிக்கையை, கோட்டே நீதிமன்றம் நிராகரித்தது

லிற்றோ நிறுவன முன்னாள் தலைவரின் கோரிக்கையை, கோட்டே நீதிமன்றம் நிராகரித்தது 0

🕔22.Dec 2017

சிகிச்சையின் நிமித்தம் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு, லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலில முனசிங்க – முன்வைத்த கோரிக்கையினை,கோட்டே நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை நிராகரித்தது. தாய்வான் வங்கியொன்றிலிருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை, இலங்கை வங்கியொன்றுக்கு பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில், ஷலில முனசிங்கவை, குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்திருந்தது. இதனையடுத்து,

மேலும்...
க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் 28ஆம் திகதி வெளியாகின்றன

க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் 28ஆம் திகதி வெளியாகின்றன 0

🕔21.Dec 2017

க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் இம்மாதம் 28ஆம் திகதி வெளியாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதி உயர்தரப் பரீட்சை ஆரம்பமானது. இம்முறை நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 03 லட்சத்து 15 ஆயிரத்து 227 பேர் தோற்றியிருந்தனர். நாடு முழுவதும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்