உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஜனவரி 25, 26ஆம் திகதிகளில் இடம்பெறும்

🕔 December 25, 2017

ள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, எதிர்வரும் ஜனவரி மாதம் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்புக்காக அரச உத்தியோகத்தர்கள் விண்ணப்பித்து, அவை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்குமாயின், மேற்கூறப்பட்ட திகதிகளில், வாக்களிக்க முடியும் என, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கும், தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, தேர்தல் கடமைகள் தொடர்பான பணிகளில் ஈடுபடவுள்ள பொலிஸார் மற்றும் பாதுகாப்பு உத்தியோகதர்தர்களும், தேர்தல் பணிகளில் நேரடியாக ஈடுபடவுள்ள அரச உத்தியோகத்தர்களும் ஜனவரி மாதம் 22ஆம் திகதி, தபால் மூலமாக வாக்களிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்