
கிழக்கு மாகாணத்தில் 2008-ஆம் ஆண்டில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஐந்து கொலைகள் தொடர்பான தொடர் விசாரணைகளின் பேரில், முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை செப்டம்பர் 01 வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2008-ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஐந்து கொலைகள் தொடர்பாக, பிள்ளையான் மற்றும் பல சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் – மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது.
மட்டக்களப்பில் உள்ள கல்லடி முருகன் கோவில் அருகே, 2008-ஆம் ஆண்டில் – முன்னாள் பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை, 2008 மே 22 அன்று காத்தான்குடி பிரதான வீதியில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டது உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பாக பிள்ளையானை குற்றப் புலனாய்வு திணைக்களம் சந்தேக நபராகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், 2008 ஓகஸ்ட் 20 ஆம் திகதி இரவு, வவுணதீவில் – ஆயுதமேந்திய குழுவினரால் மற்றொரு நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.



