காலநிலை குறித்து அவதானமாக இருக்குமாறு, மீனவர்களுக்கு எச்சரிக்கை

🕔 December 24, 2017

நாட்டின் கிழக்கு கடல் பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதுவேளை, நான்டின் சில பகுதிகளிலும் மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, வடக்கிலிருந்து – கிழக்கு திசை நோக்கி, மணிக்கு 30 தொடக்கம் 40 கிலோமீற்றர் வேகத்தில், நாட்டின் கடற் பகுதிகளில் காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

மேலும், சில பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது, கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு 70 – 80 கிலோமீற்றர் வரையில், தற்காலிகமாக அதிகரிக்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே, இது தொடர்பில் கடற்றொழிலாளர்களும், மீனவர்களும் விழிப்புடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்