எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், வைத்தியசாலையில் அனுமதி

🕔 December 22, 2017

மிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன், நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

திருகோணமலையில் நேற்று கட்சி தொடர்பான நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும், அதனையடுத்து அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகவும் தெரியவருகிறது.

இதனையடுத்து கொழும்பு வந்தடைந்த சம்பந்தன், சிகிச்சைகளுக்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு கிருமித் தொற்று ஏற்பட்டமை காரணமாகவே, உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக, அவரின் பிரத்தியேகச் செயலாளர், ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

1933ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிறந்த சம்பந்தனுக்கு தற்போது 85 வயதாகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்