உள்ளுராட்சி தேர்தல் வேட்பாளர்களில், மாடு திருடர்கள் உள்ளிட்ட குற்றவாளிகள் உள்ளனர்: பெப்ரல் தெரிவிப்பு

🕔 December 23, 2017

ள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் மாடு திருடர்கள் உள்ளிட்ட குற்றவாளிகள் இருப்பதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொள்ளையர்கள், நிதி மோசடியாளர்கள், போதை மாத்திரை கடத்தல்காரர்கள் மற்றும் மாடு திருடர்கள் உள்ளடங்கலாக பலர் வேட்பாளர்களாக உள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பெப்ரல் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்த விபரம் தெரியவந்துள்ளது.

இவ்வாறான குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள வேட்பாளர்களின் விபரங்களை சேகரித்து வருவதாகத் தெரிவித்துள்ள ஹெட்டியாராச்சி, தகவல்கள் கிடைத்தவுடன் அவர்களைப் பற்றி நாட்டுக்குத் தெரியப்படுத்தப்படும் எனவும் கூறினார்.

எனவே, குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பெப்ரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், குற்றவாளிகள் தொடர்பான விபரங்களை பெறுவதற்கு, பொலிஸ் மா அதிபரின் உதவியைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்