Back to homepage

மேல் மாகாணம்

வில்பத்து பாதை திறப்பதில் மீண்டும் இழுபறி: அடுத்த வருடத்துக்கு வழக்கு ஒத்தி வைப்பு

வில்பத்து பாதை திறப்பதில் மீண்டும் இழுபறி: அடுத்த வருடத்துக்கு வழக்கு ஒத்தி வைப்பு 0

🕔8.Jul 2019

வில்பத்து சரணாலயத்திற்கு அடுத்தாகச் செல்லும் B37 இலவன் குளம் – மறிச்சுக்கட்டி பாதையை மீண்டும் பொதுமக்களின் பாவனைக்கு திறந்து விடுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி இணக்கம் காணப்பட்டிருந்த போதும் மனுதாரர்களான சூழலியல் இயக்கங்கள் தீர்வு யோசனைக்கு , சம்மதம் தெரிவிக்க மீண்டும் மறுத்த காரணத்தினால், குறித்த வழக்கை மீண்டும் அடுத்த

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த ஒழுங்கு மேற்கொள்ளப்படும்: அமைச்சர் வஜிர

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த ஒழுங்கு மேற்கொள்ளப்படும்: அமைச்சர் வஜிர 0

🕔7.Jul 2019

அரசியல் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுமென்று பொது நிர்வாக அலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். அரசியல் யாப்பில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக உரிய காலம் குறிப்பிடப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.  ஜனாதிபதி தேர்தலில் அனைத்து இன மக்களினதும்

மேலும்...
இலங்கையில் மரண தண்டனை அமுலாக்கப்படக் கூடாது: சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையில் மரண தண்டனை அமுலாக்கப்படக் கூடாது: சர்வதேச மன்னிப்புச் சபை 0

🕔6.Jul 2019

இலங்கையில் மரணதண்டனை அமுல் செய்யப்படக் கூடாது என்று, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. அந்த சபையின் தென்னாசியாவுக்கான இயக்குநர் பிராஜ்பட்நாயக் இது குறித்து கூறுகையில் ; “மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்கள்  நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் தற்காலிகமாக  மரணதண்டனையிலிருந்து தப்பியுள்ளனர். அவர்கள் நிரந்தரமாக மரணதண்டனையிலிருந்து விடுவிக்கப்படவேண்டும்”  எனத் தெரிவித்துள்ளார். மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு  இலங்கை நீதிமன்றம் இடைக்கால தடை

மேலும்...
இஸ்லாமிய சட்டத்தின் படி, காத்தான்குடியில் 20 பேருக்கு மரண தண்டனை: ஆதாரம் உள்ளது என்கிறார் அபேதிஸ்ஸ தேரர்

இஸ்லாமிய சட்டத்தின் படி, காத்தான்குடியில் 20 பேருக்கு மரண தண்டனை: ஆதாரம் உள்ளது என்கிறார் அபேதிஸ்ஸ தேரர் 0

🕔5.Jul 2019

இஸ்லாமிய சட்டத்துக்கு (ஷரீஆ) அமைவாக காத்தான்குடி பிரதேசத்தில், இதுவரை 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.  வட்டிக்கு பணம் வழங்கியமை, அரசாங்கத்துக்கு தகவல் வழங்கியமை, பெண்கள் விபச்சாரம் செய்தமை, சூதாட்டத்தில் ஈடுபட்டமை, இஸ்லாம் மதத்தை விட்டு மதம் மாறியமை மற்றும் ராணுவத்தில் இணைந்துக்கொண்டமை ஆகிய காரணங்களுக்காகவே அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்

மேலும்...
முஸ்லிம்களுக்கு எதிரான மிரல்டல்கள் அதிகரித்துள்ளன; உன்னிப்பாய் அவதானிக்கிறோம்: இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தெரிவிப்பு

முஸ்லிம்களுக்கு எதிரான மிரல்டல்கள் அதிகரித்துள்ளன; உன்னிப்பாய் அவதானிக்கிறோம்: இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தெரிவிப்பு 0

🕔5.Jul 2019

இலங்கையிலுள்ள சில குழுக்கள் முஸ்லிம்களுக்கு மிரட்டல் விடுப்பதும், முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை மேற்கொண்டு வருகின்றமையும் அதிகரி்த்து வருகின்றதாகவும் தெரிவித்துள்ள ஓ.ஐ.சி. எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பானது, இந்த விவகாரங்களை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.  57 முஸ்லிம் நாடுகளை அங்கத்தவர்களாகக் கொண்டுள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, சௌதி அரேபியாவின் ஜித்தா நகரில்

மேலும்...
மரண தண்டனைக்கான காலம், நேரத்தை ஜனாதிபதி அறிவிக்கவில்லை:சிறைச்சாலை ஆணையாளர் தெரிவிப்பு

மரண தண்டனைக்கான காலம், நேரத்தை ஜனாதிபதி அறிவிக்கவில்லை:சிறைச்சாலை ஆணையாளர் தெரிவிப்பு 0

🕔5.Jul 2019

மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான திகதி மற்றும் நேரம் ஆகியவற்றினை ஜனாதிபதி அறிவிக்கவில்லை என்று, சிறைச்சாலை ஆணையாளர் ரி.எம்.ஜே.டப்ளியு. தென்னக்கோன் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். போதை பொருள் வர்த்தகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை அமுல்படுத்தும் பொருட்டு, நான்கு பேருக்கான மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணங்களில் ஜனாதிபதி கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான காலம்,

மேலும்...
லஞ்சம் பெற்ற முன்னாள் தவிசாளருக்கு 24 வருட சிறைத் தண்டனை

லஞ்சம் பெற்ற முன்னாள் தவிசாளருக்கு 24 வருட சிறைத் தண்டனை 0

🕔5.Jul 2019

தெரணியாகல பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ‘அத கொட்டா’ என அழைக்கப்படும் அனில் சம்பிக்க விஜேசிங்க என்பவருக்கு 24 வருட கடூழிய சிறைத் தண்டனையை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையினை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார். அனில்

மேலும்...
சொத்து சேகரிப்பு தொடர்பில், நிதி மோசடி விசாரணை பிரிவில் ஹிஸ்புல்லா வாக்குமூலம்

சொத்து சேகரிப்பு தொடர்பில், நிதி மோசடி விசாரணை பிரிவில் ஹிஸ்புல்லா வாக்குமூலம் 0

🕔4.Jul 2019

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இன்று வியாழக்கிழமை நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜரானார். அவரின் சொத்து சேகரிப்பு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு ஆஜரானார். நேற்று அவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்புப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கந்தசாமி இன்பராசா என்பவரை தொலைபேசியில் அச்சுறுத்திய முறைப்பாடு தொடர்பில், நேற்றைய தினம்

மேலும்...
பாரிய வீதி விபத்துகளும், மரணங்களும் நாட்டில் குறைந்துள்ளன: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

பாரிய வீதி விபத்துகளும், மரணங்களும் நாட்டில் குறைந்துள்ளன: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔4.Jul 2019

நாட்டில் கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் இடம்பெற்ற பாரிய வீதி விபத்துகளை விடவும், இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்கள் இடம்பெற்ற பாரிய வீதி விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில், அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். 2018ஆம் ஆண்டின்

மேலும்...
ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்புப் பிரிவில், ஹிஸ்புல்லா ஆஜர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்புப் பிரிவில், ஹிஸ்புல்லா ஆஜர் 0

🕔3.Jul 2019

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இன்று புதன்கிழமை ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்புப் பிரிவில் ஆஜரானார். அவருக்கு எதிராக, செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில், வாக்குமூலமளிக்கவே அவர் அங்கு சென்றுள்ளார். தனக்கு தொலைபேசி மூலம்  ஹிஸ்புல்லா ​மரண அச்சுறுத்தல் விடுத்ததாகத் தெரிவித்து, கந்தசாமி இன்பராசா என்பவர் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி   ஒழுங்கமைக்கப்பட்ட

மேலும்...
ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளருக்குரிய தகுதிகள் சஜித் பிரேமதாசவுக்கே உள்ளன

ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளருக்குரிய தகுதிகள் சஜித் பிரேமதாசவுக்கே உள்ளன 0

🕔3.Jul 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளருக்குரிய தகுதிகளை சஜித் பிரேமதாச கொண்டுள்ளார் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். “ஜனாதிபதி வேட்பாளராக பிரபலமடைந்துள்ளவர்  அமைச்சர் சஜித் பிரேமதாச. இவரை வெற்றியடையச் செய்வதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், சபாநாயகர் கரு ஜயசூரியவும்  இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலே அமைச்சர்

மேலும்...
துப்பாக்கியுடன் நபரொருவர் கைது

துப்பாக்கியுடன் நபரொருவர் கைது 0

🕔3.Jul 2019

துப்பாக்கி ஒன்றுடன் நபர் ஒருவர் ஜாஎல – கொட்டுகொட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.  பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலினை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கொட்டுகொட பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  சம்பவம் தொடர்பில் பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு

மேலும்...
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகிறார், ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகிறார், ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க 0

🕔2.Jul 2019

ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளார். 1981ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சையை இவர் எழுதிய போதும், அதில் சித்தியடையவில்லை. இந்த நிலையில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்காக மேலதிக நேர வகுப்புகள் மற்றும் உயர்தரப் பாட ஆசிரியர்களிடம் தான்

மேலும்...
விமல், ரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில், முன்னாள் அமைச்சர் றிசாட் வாக்கு மூலம்

விமல், ரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில், முன்னாள் அமைச்சர் றிசாட் வாக்கு மூலம் 0

🕔2.Jul 2019

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ மற்றும் எஸ்.பி திஸ்ஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் – பொலிஸ் தலைமையகத்தில்  செய்திருந்த முறைப்பாடு தொடர்பில் – இன்றைய தினம் வாக்கு மூலம் ஒன்றினை வழங்கினார்.  விமல் வீரவன்ஸ மற்றும் எஸ்.பி திஸ்ஸாநாயக்க ஆகியோர் தொடர்ச்சியாக ஊடகங்கள் வாயிலாக

மேலும்...
வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டிருந்த நிலையில், பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி கைது

வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டிருந்த நிலையில், பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி கைது 0

🕔2.Jul 2019

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோவை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். தேசிய வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கைது இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு ஆஜராகுமாறு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இவர் இன்றைய தினம் கைது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்