சொத்து சேகரிப்பு தொடர்பில், நிதி மோசடி விசாரணை பிரிவில் ஹிஸ்புல்லா வாக்குமூலம்

🕔 July 4, 2019

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இன்று வியாழக்கிழமை நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜரானார்.

அவரின் சொத்து சேகரிப்பு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு ஆஜரானார்.

நேற்று அவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்புப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கந்தசாமி இன்பராசா என்பவரை தொலைபேசியில் அச்சுறுத்திய முறைப்பாடு தொடர்பில், நேற்றைய தினம் ஹிஸ்புல்லா வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்