ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்புப் பிரிவில், ஹிஸ்புல்லா ஆஜர்

🕔 July 3, 2019

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இன்று புதன்கிழமை ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்புப் பிரிவில் ஆஜரானார்.

அவருக்கு எதிராக, செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில், வாக்குமூலமளிக்கவே அவர் அங்கு சென்றுள்ளார்.

தனக்கு தொலைபேசி மூலம்  ஹிஸ்புல்லா ​மரண அச்சுறுத்தல் விடுத்ததாகத் தெரிவித்து, கந்தசாமி இன்பராசா என்பவர் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி   ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்பு பிரிவில் முறைப்பாடு செய்தார்.

இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குகுவதற்காகவே, ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்புப் பிரிவுக்கு ஹிஸ்புல்லா சென்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்