லஞ்சம் பெற்ற முன்னாள் தவிசாளருக்கு 24 வருட சிறைத் தண்டனை

🕔 July 5, 2019

தெரணியாகல பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ‘அத கொட்டா’ என அழைக்கப்படும் அனில் சம்பிக்க விஜேசிங்க என்பவருக்கு 24 வருட கடூழிய சிறைத் தண்டனையை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையினை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

அனில் சம்பிக்க விஜேசிங்கவுக்கு 24 வருட கடூழிய சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக 20 ஆயிரம் ரூபாய் அபராதமும், 04 லட்சம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, இந்த வழக்கின் வாதிக்கு 250,000 ரூபாய் நஷ்ட ஈட்டு பணம் வழங்குமாறும், தவறினால் மேலதிகமாக 02 வருட சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

2001 ஆம் ஆண்டில் தெரணியகல பகுதியில் வசித்த ஒருவரிடம் காணிச் சான்றிதழ் ஒன்றை வழங்குவதற்காக, 05 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டிற்காகவே குறித்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்