மரண தண்டனைக்கான காலம், நேரத்தை ஜனாதிபதி அறிவிக்கவில்லை:சிறைச்சாலை ஆணையாளர் தெரிவிப்பு
மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான திகதி மற்றும் நேரம் ஆகியவற்றினை ஜனாதிபதி அறிவிக்கவில்லை என்று, சிறைச்சாலை ஆணையாளர் ரி.எம்.ஜே.டப்ளியு. தென்னக்கோன் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
போதை பொருள் வர்த்தகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை அமுல்படுத்தும் பொருட்டு, நான்கு பேருக்கான மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணங்களில் ஜனாதிபதி கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான காலம், நேரம் ஆகியவற்றினை இதுவரை ஜனாதிபதி அறிவிக்கவில்லை என்று, சிறைச்சாலை ஆணையாளர் நீதிமன்றில் கூறியுள்ளார்.
போதை பொருள் வர்த்தகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மேற்கொண்டுள்ள தீர்மானத்தை ரத்துச் செய்யுமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின்போதே, சிறைச்சாலைகள் ஆணையாளர் இந்தத் தகவலை வெளியிட்டார்.