க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகிறார், ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க

🕔 July 2, 2019

ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளார்.

1981ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சையை இவர் எழுதிய போதும், அதில் சித்தியடையவில்லை.

இந்த நிலையில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்காக மேலதிக நேர வகுப்புகள் மற்றும் உயர்தரப் பாட ஆசிரியர்களிடம் தான் கல்வி பயின்று வருவதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க கூறியுள்ளார்.

”அமைச்சுக்கு காலையில் செல்வேன், நாடாளுமன்றத்தில் மாலை உரை நிகழ்த்துவேன், இரவு வேளைகளில் கல்வி பயில்வேன். இதுவே இந்த நாட்களில் எனது கடமைகள்” என ரஞ்ஜன் ராமநாயக்க கூறியுள்ளார்.

1979ஆம் ஆண்டு கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைக்கு தோன்றியதாகவும், அதில் D-1, C-5, S-1 மற்றும் F-1 ஐ பெற்று சித்தியடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், 1981ஆம் ஆண்டு தான் உயர்தர தேர்வு எழுதி, ஒரு பாடத்தில் மாத்திரமே தான் சித்தியடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தான் உயர்தர தேர்வு எழுதுவதை கேள்வியுற்ற நண்பர்கள் பலர் தன்னைப் பார்த்து சிரித்ததாகவும், அரசியல்வாதி என்பதனால் மக்களும் இது குறித்து சிரிப்பார்கள் என்றும் கூறிய அவர்; சட்டக் கல்வியை கற்பதற்கு தான் விருப்புவதாகவும், அதற்கு க.பொ.த. உயர் தரத்தில் சித்தி பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்