மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த ஒழுங்கு மேற்கொள்ளப்படும்: அமைச்சர் வஜிர

🕔 July 7, 2019

ரசியல் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுமென்று பொது நிர்வாக அலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

அரசியல் யாப்பில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக உரிய காலம் குறிப்பிடப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஜனாதிபதி தேர்தலில் அனைத்து இன மக்களினதும் வாக்குகள் மூலம் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்