இஸ்லாமிய சட்டத்தின் படி, காத்தான்குடியில் 20 பேருக்கு மரண தண்டனை: ஆதாரம் உள்ளது என்கிறார் அபேதிஸ்ஸ தேரர்

🕔 July 5, 2019

ஸ்லாமிய சட்டத்துக்கு (ஷரீஆ) அமைவாக காத்தான்குடி பிரதேசத்தில், இதுவரை 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். 

வட்டிக்கு பணம் வழங்கியமை, அரசாங்கத்துக்கு தகவல் வழங்கியமை, பெண்கள் விபச்சாரம் செய்தமை, சூதாட்டத்தில் ஈடுபட்டமை, இஸ்லாம் மதத்தை விட்டு மதம் மாறியமை மற்றும் ராணுவத்தில் இணைந்துக்கொண்டமை ஆகிய காரணங்களுக்காகவே அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இந்த காரணங்களுக்காக காத்தான்குடி பிரதேசத்தில் இஸ்லாமிய சட்டத்தின் பெயரில் 20 பேருக்கும் அதிகமானோருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

‘வஹாப் அடிப்படைவாதத்தை இல்லாதொழிப்போம்’ என்ற கருப்பொருளில் நேற்று வியாழக்கிழமை நுகேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அபேதிஸ்ஸ தேரர் இதனைக் கூறினார். 

இதற்கான அனைத்து ஆதாரங்களும் தகவல்களும் தன்னிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே தமக்கு எதிராக சவால் இருப்பதாகவும் அனைவரும் ஒன்றிணைந்து, இதற்கெதிரான போராட்டத்தில் ஈடுபடவேண்டும் எனவும் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்