வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டிருந்த நிலையில், பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி கைது
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோவை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
தேசிய வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இன்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு ஆஜராகுமாறு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இவர் இன்றைய தினம் கைது செய்யப்படுவார் என, நேற்றிலிருந்தே செய்திகள் வெளியாகியிருந்தன.
இதேவேளை, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இவரும் இன்றைய தினம் நாரேஹேன்பிட்டியவில் உள்ள பொலிஸ் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று ஆஜராகுமாறு, இவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே, இவரையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.