துப்பாக்கியுடன் நபரொருவர் கைது

🕔 July 3, 2019

துப்பாக்கி ஒன்றுடன் நபர் ஒருவர் ஜாஎல – கொட்டுகொட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். 

பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலினை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொட்டுகொட பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்