Back to homepage

Tag "கொரோனா"

கொரோனாவினால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை சேகரித்து வைக்க, குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை உருவாக்க திட்டம்

கொரோனாவினால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை சேகரித்து வைக்க, குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை உருவாக்க திட்டம் 0

🕔20.Dec 2020

கொரோனா பாதிப்பினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு அவர்களின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதனால், அது குறித்த தீர்மானத்துக்கு வரும் வரையில், இறந்த உடல்களை சேகரித்து வைப்பதற்கு குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை உருவாக்கும் திட்டமொான்று முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஐந்து கொள்கலன்களும் 05 இடங்களில் நிறுவப்படும் என, சுகாதர பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும்...
முகக் கவசமின்றி பெண் ஒருவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட சிலி நாட்டு ஜனாதிபதி: பெருந்தொகை அபராதம்

முகக் கவசமின்றி பெண் ஒருவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட சிலி நாட்டு ஜனாதிபதி: பெருந்தொகை அபராதம் 0

🕔20.Dec 2020

கொரோனா வைரஸ் தடுப்பு விதிகளைக் கடைபிடிக்காமல், செல்ஃபிக்கு போஸ் கொடுத்ததால், சிலி நாட்டின் ஜனாதிபதி செபாஸ்டியன் பீன்யேராவுக்கு 3,500 அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் 06லட்சத்து 57 ஆயிரம் ரூபா) அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. சிலி நாட்டின் ஜனாதிபதி செபாஸ்டியன் பீன்யேராவும் ஒரு பெண்ணும் ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அந்தப் படத்தில் இருவருமே முகக் கவசம்

மேலும்...
கொரோனா: மேலும் 05 பேர் மரணம்

கொரோனா: மேலும் 05 பேர் மரணம் 0

🕔18.Dec 2020

நாட்டில் மேலும் 05 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. அந்தவகையில் இதுவரையில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 165ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கொரோனா தொற்று காரணமாக 35,763 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 27,061 பேர் குணமடைந்துள்ளனர் என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. உலகளவில் 07 கோடியே 38 லட்சத்து 95,957 பேர் இதுவரையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 16

மேலும்...
கொரோனாவுக்கானவை எனக் கூறப்படும் மூலிகை மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம்: அமைச்சின் செயலாளர் அறிவிப்பு

கொரோனாவுக்கானவை எனக் கூறப்படும் மூலிகை மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம்: அமைச்சின் செயலாளர் அறிவிப்பு 0

🕔15.Dec 2020

கொவிட்-19 தொற்றாளர்களுக்கு தரமானது என கூறி இணையத்தளங்களில் பிரபல்யப்படுத்தப்படும் சுதேச மூலிகை மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாமென அரசாங்கம் மக்களை அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறான மூலிகை மருந்துகள் தொடர்பில் எதுவித பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை என சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி, மக்கள் சுகாதார ராஜாங்க அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர தெரிவித்துள்ளார். ஆயுர்வேத

மேலும்...
கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்காதோரின் சொத்துக்கள் முடக்கப்படும்: பொலிஸ் பேச்சாளர்

கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்காதோரின் சொத்துக்கள் முடக்கப்படும்: பொலிஸ் பேச்சாளர் 0

🕔14.Dec 2020

கொவிட்-19 வைரஸ் தொற்றை உறுதிசெய்து கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களது சொத்துக்கள் முடக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்தார். “வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டுலுகம போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன்

மேலும்...
கொரோனா தடுப்பு மருந்துகள் சிலவற்றுக்கு, உலக சுகாதார அமைப்பு அங்கிகாரம் வழங்க தீர்மானம்

கொரோனா தடுப்பு மருந்துகள் சிலவற்றுக்கு, உலக சுகாதார அமைப்பு அங்கிகாரம் வழங்க தீர்மானம் 0

🕔12.Dec 2020

கொரோனா தடுப்பு மருந்துகள் சிலவற்றுக்கு, உலக சுகாதார அமைப்பு அங்கிகாரம் வழங்கவுள்ளது. அந்த வகையில் மூன்று மருந்துகளுக்கு, அடுத்த வாரமளவில் உலக சுகாதார அமைப்பு அங்கிகாரம் வழங்கவுள்ளதாக கூறியுள்ளது. இதன்படி பைசர், மொடனா மற்றும் அஸ்ட்ரா செனக்கா ஆகிய நிறுவனங்களின் மருந்துகளுக்கே அங்கிகாரம் வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே பிரித்தானியாவில் பைசர் நிறுவனத்தின் மருந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும்...
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்: மக்களை ஒன்று திரட்டி நிவாரணப் பொருட்கள் விநியோகம்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்: மக்களை ஒன்று திரட்டி நிவாரணப் பொருட்கள் விநியோகம் 0

🕔12.Dec 2020

– அஹமட் – தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில், பெருமளவான பொதுமக்களை ஒரே இடத்தில் ஒன்று திரட்டி, அரசு வழங்கும் நிவாரணப் பொருட்களை அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் விநியோகித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. கொரோனா பரவுதல் காரணமாக கடந்த 16 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குமாறு அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது.

மேலும்...
சிறையிலுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவுக்கு கொரோனா

சிறையிலுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவுக்கு கொரோனா 0

🕔12.Dec 2020

வெலிகட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட வாஸ் குணவர்த்தன, அதற்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள நிலையில், தற்போது வெலிக்கட சிறைச்சாலையில்

மேலும்...
கொரோனாவை கட்டுப்படுத்த, 250 மில்லியன் டொலர் நன்கொடையளித்தார் பில்கேட்ஸ்

கொரோனாவை கட்டுப்படுத்த, 250 மில்லியன் டொலர் நன்கொடையளித்தார் பில்கேட்ஸ் 0

🕔11.Dec 2020

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளுக்காக,  250 மில்லியன் டொலர்களை (இலங்கை பெறுமதியில் சுமார் 4621 கோடி ரூபாய்) உலகப் பெரும் பணக்காரர் பில்கேட்ஸ் வழங்கியுள்ளார். ‘பில் அன்ட் மெலிண்டா கேற்ஸ் அறக்கட்டளை’ ஊடாக (Bill & Melinda Gates Foundation) இந்த நன்கொடையினை பில்கேட்ஸ் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து மைக்ரோசொஃப்டின்

மேலும்...
நான்கு சிங்கங்களுக்கு கொரோனா: ஸ்பெயின் மிருகக்காட்சி சாலையில் சிகிச்சை

நான்கு சிங்கங்களுக்கு கொரோனா: ஸ்பெயின் மிருகக்காட்சி சாலையில் சிகிச்சை 0

🕔10.Dec 2020

ஸ்பெயின் – பார்சிலோனா மிருகக்காட்சி சாலையில் நான்கு சிங்கங்கள் கொவிட் -19 தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை அதிகாரிகள் செவ்வாய்கிழமையன்று தெரிவித்துள்ளனர். மேற்படி சிங்கங்கள் எவ்வாறு கொரோனவினால் பாதிக்கப்பட்டன என்பது குறித்து கால்நடை மருத்துவர்கள் உறுதியாக கூறவில்லை. இருந்தபோதும், மிருகக்காட்சி சாலை பாதுகாவலர்கள் இருவர், கோரோவினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஸலா, நிமா மற்றும் ரன் ரன் எனும் பெயர்களையுடைய

மேலும்...
பொலிஸ் மா அதிபர் தனிமைப்படுத்தப்பட்டார்: அவரின் சாரதிக்கு கொரோனா தொற்று

பொலிஸ் மா அதிபர் தனிமைப்படுத்தப்பட்டார்: அவரின் சாரதிக்கு கொரோனா தொற்று 0

🕔10.Dec 2020

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன மற்றும் அவரின் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபரின் சாரதி கொரோனாவால் பாதிக்கப்பட்டமை தெரியவந்ததை அடுத்து, பொலிஸ் மா அதிபரும், அவரின் ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ தலைமையிலான தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில், நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை பொலிஸ் மா அதிபர் கலந்து

மேலும்...
கொரோனா: பிரேத அறைகளில் வைக்கப்பட்டிருக்கும் உடல்களை தகனம் செய்ய, சட்டமா அதிபர் அனுமதி

கொரோனா: பிரேத அறைகளில் வைக்கப்பட்டிருக்கும் உடல்களை தகனம் செய்ய, சட்டமா அதிபர் அனுமதி 0

🕔9.Dec 2020

கொரோனா காரணமாக மரணித்தவர்களை எரிப்பற்கு உறவினர்கள் அனுமதி வழங்காத நிலையிலும் வேறு சில காரணங்களின் பொருட்டும், இதுவரையில் இறுதிச் சடங்கு நடத்தப்படாத பிரேதங்களை உடனடியாக தகனம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி அரச சட்டவாதி நிஷாரா

மேலும்...
இருபது நாள் குழந்தை கொரோனாவுக்கு பலி

இருபது நாள் குழந்தை கொரோனாவுக்கு பலி 0

🕔8.Dec 2020

பிறந்து 20 நாட்களேயான குழந்தையொன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது. கொழும்பிலுள்ள ‘லேடி ரிஜ்வே’ வைத்தியசாலையில் இந்த மரணம் பதிவாகியுள்ளது. இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் மிகவும் குறைந்த வயதுடையவராக இந்தக் குழந்தை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் நாட்டில் இதுவரையில் 142 பேர் கொரோவினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதேவேளை,

மேலும்...
அட்டாளைச்சேனை – அக்கரைப்பற்று எல்லை உள்வீதிளுக்கு தடை; யாரின் தீர்மானம்: தவிசாளர் அமானுல்லா விளக்கம்

அட்டாளைச்சேனை – அக்கரைப்பற்று எல்லை உள்வீதிளுக்கு தடை; யாரின் தீர்மானம்: தவிசாளர் அமானுல்லா விளக்கம் 0

🕔8.Dec 2020

– முன்ஸிப் – அக்கரைப்பற்று – அட்டாளைச்சேனை எல்லையின் உள்வீதிகளில் போக்குவரத்தை தடைசெய்யும் வகையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் இன்று தடுப்புகள் இடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து இந்த நடவடிக்கை குறித்து விமர்சனங்களும் எழத் தொடங்கியுள்ளன. அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளரின் இந்த நடவடிக்கையானது, அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை மக்களிடையே கசப்புணர்வை ஏற்படுத்தும் என, இந்த

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்; அதிக விலையில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குகின்றமை அம்பலம்: 21 லட்சம் ரூபாவுக்கு ‘மண்’

அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்; அதிக விலையில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குகின்றமை அம்பலம்: 21 லட்சம் ரூபாவுக்கு ‘மண்’ 0

🕔8.Dec 2020

– அஹமட் – தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கு அரசாங்கத்தின் நிவாரணப் பொருட்களை வழங்கும் நடவடிக்கையின் போது, அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் – அதிக விலையில் பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகின்றமையினை ‘புதிது’ செய்தித்தளம் கண்டறிந்துள்ளது. அக்கரைப்பற்று பிரதேச செயலகம் – மக்களுக்கு வழங்கி வரும் நிவாரணப் பொருட்களின் விலைகளுடன், அட்டாளைச்சேனை பிரசே செயலகம் வழங்கும் பொருட்களின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்