நான்கு சிங்கங்களுக்கு கொரோனா: ஸ்பெயின் மிருகக்காட்சி சாலையில் சிகிச்சை

🕔 December 10, 2020

ஸ்பெயின் – பார்சிலோனா மிருகக்காட்சி சாலையில் நான்கு சிங்கங்கள் கொவிட் -19 தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை அதிகாரிகள் செவ்வாய்கிழமையன்று தெரிவித்துள்ளனர்.

மேற்படி சிங்கங்கள் எவ்வாறு கொரோனவினால் பாதிக்கப்பட்டன என்பது குறித்து கால்நடை மருத்துவர்கள் உறுதியாக கூறவில்லை. இருந்தபோதும், மிருகக்காட்சி சாலை பாதுகாவலர்கள் இருவர், கோரோவினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஸலா, நிமா மற்றும் ரன் ரன் எனும் பெயர்களையுடைய 16 வயதுடைய சிங்கங்களும் மற்றும் 04 வயதுடைய கியும்பே எனும் சிங்கமும் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதேவேளை அங்குள்ள ஊழியர்களுக்கு நொவம்பர் மாதம் நோயின் லேசான அறிகுறிகள் தென்படத் தொடங்கியதை அடுத்து, அவர்களுக்கும் பிசிஆர் சோதனைகள் நடத்தப்பட்டன.

மிருகக்காட்சிசாலையில் சிங்கங்கள் மிகவும் லேசான காய்ச்சல் நிலைக்கு ஒத்த பாதிப்புக்கு உள்ளானதகவும், அதற்காக சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் அங்குள்ள அதிகாரிகள் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தனர்.

நான்கு சிங்கங்களும் சிகிச்சைகளுக்கு ஒத்துழைப்பதாகவும், மேலும் அவை உன்னிப்பாகக் கவனிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்