இருபது நாள் குழந்தை கொரோனாவுக்கு பலி

🕔 December 8, 2020

பிறந்து 20 நாட்களேயான குழந்தையொன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது.

கொழும்பிலுள்ள ‘லேடி ரிஜ்வே’ வைத்தியசாலையில் இந்த மரணம் பதிவாகியுள்ளது.

இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் மிகவும் குறைந்த வயதுடையவராக இந்தக் குழந்தை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் நாட்டில் இதுவரையில் 142 பேர் கொரோவினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 28,580 பேர் இதுவரையில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20,804 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்