கொரோனாவை கட்டுப்படுத்த, 250 மில்லியன் டொலர் நன்கொடையளித்தார் பில்கேட்ஸ்

🕔 December 11, 2020

லகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளுக்காக,  250 மில்லியன் டொலர்களை (இலங்கை பெறுமதியில் சுமார் 4621 கோடி ரூபாய்) உலகப் பெரும் பணக்காரர் பில்கேட்ஸ் வழங்கியுள்ளார்.

‘பில் அன்ட் மெலிண்டா கேற்ஸ் அறக்கட்டளை’ ஊடாக (Bill & Melinda Gates Foundation) இந்த நன்கொடையினை பில்கேட்ஸ் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து மைக்ரோசொஃப்டின் ஸ்தாபகர் பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘உலகின் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகளில் உதவுவதற்காக, 250 மில்லியன் டொலர்கள் நன்கொடை அளிக்கப்படவுள்ளதாக’ தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நன்கொடையின் ஒரு பகுதி, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆபிரிக்க நாடுகளில் கொரோனா தடுப்பூசி விநியோகிப்பதற்குப் பயன்படுத்தப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்