
பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன மற்றும் அவரின் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் சாரதி கொரோனாவால் பாதிக்கப்பட்டமை தெரியவந்ததை அடுத்து, பொலிஸ் மா அதிபரும், அவரின் ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக, ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ தலைமையிலான தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில், நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை பொலிஸ் மா அதிபர் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொலிஸ் மா அதிபர் உட்பட பொலிஸ் தலைமையகத்தின் மூன்றாவது மாடியில் உள்ள பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் அதிகாரிகள், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.



