
வெலிகட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட வாஸ் குணவர்த்தன, அதற்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள நிலையில், தற்போது வெலிக்கட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.



