
தாய்லாந்தில் இன்று (07) வெள்ளிக்கிழமை காலை ஒரு உயர்தரப் பாடசலையொன்றில் மாணவனொருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் – ஆசிரியர்களும் மாணவர்களும் என, 06 பேர் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்தவர்களில் மூன்று பேர் மாணவர்கள், மூன்று பேர் ஆசிரியர்கள் ஆவர். மேலும், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சந்தேகத்திற்குரிய துப்பாக்கிதாரியின் பாட்டியும் தாத்தாவும், அவர் வசித்து வந்த அவர்களது வீட்டில் பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிதாரி பாடசாலையில் தனது வெறியாட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பே அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
சுமார் 3,000 மாணவர்கள் பயிலும் புகழ்பெற்ற உயர்தரப் பாடசாலையிலேயே இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
சந்தேகத்துக்குரிய துப்பாக்கிதாரி இறந்துவிட்டதாக பொலஸார் கூறியதாக ஆரம்ப அறிக்கைகள் தெரிவித்திருந்த நிலையில், அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், வைத்திய’ர்கள் அவருக்கு அவசர சிகிச்சை அளித்து வருவதாகவும் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.
சம்பவத்தில் குறைந்தது 15 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
“அது துப்பாக்கிச் சத்தம் என்று நான் நினைக்கவில்லை,” என்றார் அவர், “பின்னர், ‘பேங், பேங், பேங்’ என்பது போல அந்தச் சத்தம் அடிக்கடி கேட்கத் தொடங்கியது, பிறகு ஒரு கட்டத்தில் அமைதியானது. மீண்டும் துப்பாக்கிச் சூடு தொடங்கியது.”



