தலைப்புச் செய்திகள்

நாமலுக்கு லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டில், கிரிஷ் குரூப் நிறுவன முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானகி சிறிவர்த்தன கைது

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, ‘கிரிஷ் குரூப்’ (Krrish Group) நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவை, லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நாமல் ராஜபக்ஷவுக்கு மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 70 மில்லியன் ரூபாயை வழங்கியதாக, ஜானகி சிறிவர்தன மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ஆணைக்கு தெரிவிக்கிறது.

இக்குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணை தொடர்பான மேலதிக விவரங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.