
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சட்டத்தரணி ஹபீப் றிபான் இன்று (24) நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்.
இன்று (24) காலை நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்கியதும், சபாநாயகர் முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய எம்.எஸ். அப்துல் வாஹித் அண்மையில் பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமானது.
இதனையடுத்து, குறித்த வெற்றிடத்துக்கு ஓட்டமாவடியைச் சேர்ந்த சட்டத்தரணி ஹபீப் றிபான் நியமிக்கப்பட்டார்.



