
தொழிற்சாலையொன்றில் பணிபுரிவோரை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று – புலத்சிங்கலவிலுள்ள உடுகலகந்த, அமரகெதர பகுதியில், செங்குத்தான சரிவில் கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில், இன்று காலை (07) குறைந்தது 14 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்துக்குள்ளான வேன், உடுகலகந்த பகுதியிலிருந்து தொழிற்சாலையொன்றின் பணியாளர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தபோது, இந்தச் சம்பவம் நடந்தது.
காயமடைந்தவர்களில், 06 பேர் ஹொரன மாவட்ட வைத்தியசாலையிலும், மேலும் 08 பேர் புலத்சிங்கல பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்களில் பன்னிரண்டு பேர் பெண்கள் என்றும், வேன் சாரதிஜ உட்பட இரண்டு ஆண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் யாருக்கும் தீவிரமான நிலை இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.



