தலைப்புச் செய்திகள்

இணையவழிக் குற்றத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் 1093 பேர் இந்த வருடம் கைது

இணையவழிக் குற்றம் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 1,093 வெளிநாட்டுப் பிரஜைகளை – இலங்கை பொலிஸார் இந்த ஆண்டு இதுவரை நடத்தப்பட்ட 24 சோதனைகளின் போது கைது செய்துள்ளனர்.

‘ரதம எகட’ தேசிய நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பொலிஸ் ஊகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வூட்லர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

2024-ஆம் ஆண்டில் 26 சம்பவங்களில் 573 வெளிநாட்டுப் பிரஜைகளும், 2025-ஆம் ஆண்டில் இரண்டு சம்பவங்களில் 26 வெளிநாட்டுப் பிரஜைகளும் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

”இந்த ஆண்டில் கைதுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 24 சோதனைகளின் போது 1,093 வெளிநாட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகளை, அவரவர் நாடுகளுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடைமுறைகள் தற்போது நடைபெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.