புற்று நோயாக மாறியிருக்கும் நிறுவனங்களை கண்காணிக்க புதிய சட்டமூலம்

புற்று நோயாக மாறியிருக்கும் நிறுவனங்களை கண்காணிக்க புதிய சட்டமூலம் 0

🕔5.Dec 2023

நாட்டில் இயங்கி வரும் நுண்நிதி நிறுவனங்களைக் கண்காணிக்கும் வகையில் புதிய சட்டமூலமொன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். சில நுண்நிதி நிறுவனங்கள் நாட்டுக்கு புற்று நோயாக மாறியுள்ளதாகவும், மத்திய வங்கியின் ஊடாக அன்றி – தனியான நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதன் ஊடாக, அந்த நிறுவனங்களை கண்காணிக்கத்

மேலும்...
சிறுவர் நன்நடத்தை பாடசாலை மேற்பார்வையாளருக்கு 14 நாட்கள் விளக்க மறியல்

சிறுவர் நன்நடத்தை பாடசாலை மேற்பார்வையாளருக்கு 14 நாட்கள் விளக்க மறியல் 0

🕔4.Dec 2023

நீதிமன்ற அனுமதிக்கு இணங்க, நன்நடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, அந்தப் பாடசாலையின் பெண் மேற்பார்வையாளரான பிறின்ஸி புலேந்திரன் என்பவரை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இம் மாதம் 18 ஆம்  திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திருட்டுக் குற்றத்தில் கைது

மேலும்...
அதாஉல்லாவின் முறைப்பாட்டை அடுத்து, இடைநிறுத்தப்பட்ட எம்.எஸ். லங்கா நிறுவனத்துக்கு அதிகாரிகள் விஜயம்: விடயங்களை தெளிவுபடுத்தினார் சபீஸ்

அதாஉல்லாவின் முறைப்பாட்டை அடுத்து, இடைநிறுத்தப்பட்ட எம்.எஸ். லங்கா நிறுவனத்துக்கு அதிகாரிகள் விஜயம்: விடயங்களை தெளிவுபடுத்தினார் சபீஸ் 0

🕔4.Dec 2023

அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும், கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ்.எம். சபீஸுக்குச் சொந்தமான ‘எம்.எஸ். லங்கா’ (M S LANKA) நிறுவனத்துக்கான அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக ஆராய்ந்து – நாடாளுமன்றக் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு, குறித்த நிறுவனத்துக்கு அரச அதிகாரிகள் விஜயம் செய்தனர். தனது நிறுவனத்துக்கு எதிராக

மேலும்...
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் மகனிடம், போக்குவரத்துப் பொலிஸார் லஞ்சம் கோரியதாக குற்றச்சாட்டு

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் மகனிடம், போக்குவரத்துப் பொலிஸார் லஞ்சம் கோரியதாக குற்றச்சாட்டு 0

🕔4.Dec 2023

கண்டி – கலகெதர பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் மகனிடம் லஞ்சம் கோரியதாக ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சரின் மகன் – கண்டிக்குச் செல்லும் வழியில், வாகனத்தை முந்திச் செல்லும் போது போக்குவரத்து விதிகளை மீறியதமைக்காக போக்குவரத்து பொலிஸாரால்

மேலும்...
பாலியல் நடத்தைக்குப் பயன்படுத்தப்படும் பெருந்தொகை மருந்து, ஜெல் சிக்கின: சந்தேக நபரும் கைது

பாலியல் நடத்தைக்குப் பயன்படுத்தப்படும் பெருந்தொகை மருந்து, ஜெல் சிக்கின: சந்தேக நபரும் கைது 0

🕔3.Dec 2023

– அஷ்ரப் ஏ சமத் – பாலியல் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படும் குளிசைகள், ஜெல் உள்ளிட்ட சட்டவிரோதமான மருந்துவகைகளை பாரியளவில் இலங்கைக்குள் கொண்டுவந்த நபரொருவர் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார். 61 வயதுடைய சந்தேக நபர் – குணசிங்கபுரவில் உள்ள வீடொன்றில், குறித்த பொருட்களைக் களஞ்சியப்படுத்தியிருந்த நிலையில், அவரை குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்தனர். பாலியல் நடத்தைகளுக்கு

மேலும்...
காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் நிறுவ, ஜனாதிபதி ரணில் பரிந்துரைப்பு

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் நிறுவ, ஜனாதிபதி ரணில் பரிந்துரைப்பு 0

🕔3.Dec 2023

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தின் (ICCU) திட்டத்தை இன்று (03) டுபாயில் நடைபெற்ற COP 28 மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்தார். உலக நாடுகள் – பாரிஸ் உடன்படிக்கைக்கு இணங்கிய போதிலும், அந்த நாடுகள் ஒப்புக்கொண்ட இலக்குகளை அடைவதற்கு ஆதரவளிக்கும் வகையில், குறிப்பிடத்தக்க நிறுவன மாற்றங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் ஜனாதிபதி

மேலும்...
நீதிமன்ற உத்தரவில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுவன் மரணம்: நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் கைது

நீதிமன்ற உத்தரவில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுவன் மரணம்: நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் கைது 0

🕔3.Dec 2023

– பாறுக் ஷிஹான் – சிறுவர் நன்நடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில், சிறுவன் ஒருவன் உயிரிழந்தமை தொடர்பில் – அந்தப் பாடசாலையின் பெண் மேற்பார்வையாளரை சந்தேகத்தின் பேரில் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர் நன்நடத்தை பாடசாலையில் கடந்த மாதம் 17ஆம் திகதி

மேலும்...
இஸ்ரேலின் தொடரும் நர வேட்டை: காஸாவில் வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் 200க்கும் மேற்பட்டோர் கொலை

இஸ்ரேலின் தொடரும் நர வேட்டை: காஸாவில் வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் 200க்கும் மேற்பட்டோர் கொலை 0

🕔2.Dec 2023

இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்தம் வெள்ளிக்கிழமை முடிவடைந்த பின்னர், காஸாவில் கிட்டத்தட்ட 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒக்டோபர் 07 ஆம் திகதிக்குப் பின்னர் அங்கு மொத்த உயிரிழப்பு 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். கான் யூனிஸ் மற்றும் ரஃபாவின் தெற்கு நகரங்கள் உட்பட, காஸா முழுவதும் பல இலக்குகளை இஸ்ரேலிய விமானங்கள்

மேலும்...
“கோட்டா மற்றும் அரச அதிகாரிகள் சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளேன்”: றிஷாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு

“கோட்டா மற்றும் அரச அதிகாரிகள் சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளேன்”: றிஷாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு 0

🕔1.Dec 2023

தன்னை அநியாயமாக கைது செய்து தடுத்து வைத்தமைக்காக – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அரச அதிகாரிகள் சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்று (டிசம்பர் 01) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ –

மேலும்...
மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அமர்வில் கலந்து கொள்ள ஒரு மாதம் தடை

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அமர்வில் கலந்து கொள்ள ஒரு மாதம் தடை 0

🕔1.Dec 2023

நாடாளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோர் – ஒரு மாத காலத்துக்கு நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு – இவ்வாறு தடை விதிக்கத் தீர்மானித்துள்ளது. ராஜாங்க அமைச்சர் டயனா கமகே, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும்

மேலும்...
காஸாவில் போர் நிறுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து நடந்த தாக்குதலில் 109 பலஸ்தீனர்கள் இன்று பலி

காஸாவில் போர் நிறுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து நடந்த தாக்குதலில் 109 பலஸ்தீனர்கள் இன்று பலி 0

🕔1.Dec 2023

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம் இன்று (01) காலை முடிவடைந்துள்ள நிலையில், இஸ்ரேலின் தாக்குதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் பலஸ்தீன பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஆகக்குறைந்தது 109 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் எனவும் அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், காஸாவிலுள்ள 200 இலக்குகளை இன்று தாம் தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே குண்டுத்

மேலும்...
மருந்து இறக்குமதியில் இடம்பெறும் ஊழல், முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை: ராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல

மருந்து இறக்குமதியில் இடம்பெறும் ஊழல், முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை: ராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல 0

🕔1.Dec 2023

மருந்துகளைக் கொள்முதல் செய்வது தொடர்பான சிறப்பு வழிகாட்டல்களை வெளியிடுவது மற்றும் அதற்காக ஒரு தனி நிறுவனத்தை நிறுவுவது குறித்து, 2024 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் ஊடாக மருந்து இறக்குமதியில் இடம்பெறும் ஊழல், முறைகேடுகள் மற்றும் ஏனைய சர்ச்சைக்குரிய விடயங்களைத் தடுக்க வழி ஏற்படும் என்று சுகாதார ராஜாங்க

மேலும்...
கிழக்கில் சதொச கிளைகள் மூடப்பட்டு, பணியாளர்கள் பழிவாங்கப்பட்டனர்: றிசாட் எம்.பி குற்றச்சாட்டு

கிழக்கில் சதொச கிளைகள் மூடப்பட்டு, பணியாளர்கள் பழிவாங்கப்பட்டனர்: றிசாட் எம்.பி குற்றச்சாட்டு 0

🕔1.Dec 2023

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் பணிபுரிந்த பெரும்பாலான சதொச கிளைகள் மூடப்பட்டு, அங்கிருந்த ஊழியர்கள் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டமையால், பிரதேச மக்களும் சதொச பணியாளர்களும் மிகவும் கஷ்டப்படுவதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் வர்த்தக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். இன்றைய தினம் (01) நாடாளுமன்றில் இந்தக் கோரிக்கையை

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் உள்ளூர் அரசியல் சக்திகள் தொடர்பு; 53 வீதமானோர் நம்பிக்கை: ஆய்வு முடிவு

ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் உள்ளூர் அரசியல் சக்திகள் தொடர்பு; 53 வீதமானோர் நம்பிக்கை: ஆய்வு முடிவு 0

🕔1.Dec 2023

2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்களில், உள்ளூர் அரசியல் சக்திகள் சம்பந்தப்பட்டதாக 53% க்கும் அதிகமான இலங்கை மக்கள் நம்புகின்றனர் என்று ‘சிண்டிகேட்டட் சர்வேஸ்’ (Syndicated Surveys) மூலம் ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்’ என்பது குறித்து நாட்டில் நிலவும்

மேலும்...
எரிபொருள் விலைகளில் இன்று தொடக்கம் மாற்றம்

எரிபொருள் விலைகளில் இன்று தொடக்கம் மாற்றம் 0

🕔1.Dec 2023

எரிபொருள் விலையில் இன்று (01) தொடக்கம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாற்றம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 356 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 346 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. ஒக்டேன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்