சிறுவர் நன்நடத்தை பாடசாலை மேற்பார்வையாளருக்கு 14 நாட்கள் விளக்க மறியல்

🕔 December 4, 2023

நீதிமன்ற அனுமதிக்கு இணங்க, நன்நடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, அந்தப் பாடசாலையின் பெண் மேற்பார்வையாளரான பிறின்ஸி புலேந்திரன் என்பவரை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இம் மாதம் 18 ஆம்  திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருட்டுக் குற்றத்தில் கைது செய்யப்பட்ட குறித்த சிறுவன், நீதிமன்ற உத்தரவுக்கிணங்க, கல்முனை – இஸ்லாமாபாத் பகுதியிலுள்ள சிறுவர் நன்நடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இதனையடுத்து சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் பெண் மேற்பார்வையாளரை சந்தேகத்தின் பேரில் நேற்று – கல்முனை தலைமையக பொலிஸார்  கைது செய்தனர்.

இந்தப் பின்னணயில் குறித்த சந்தேக நபர் இன்று (4) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

தொடர்பான செய்தி: நீதிமன்ற உத்தரவில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுவன் மரணம்: நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் கைது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்