அதாஉல்லாவின் முறைப்பாட்டை அடுத்து, இடைநிறுத்தப்பட்ட எம்.எஸ். லங்கா நிறுவனத்துக்கு அதிகாரிகள் விஜயம்: விடயங்களை தெளிவுபடுத்தினார் சபீஸ்

🕔 December 4, 2023

க்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும், கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ்.எம். சபீஸுக்குச் சொந்தமான ‘எம்.எஸ். லங்கா’ (M S LANKA) நிறுவனத்துக்கான அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக ஆராய்ந்து – நாடாளுமன்றக் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு, குறித்த நிறுவனத்துக்கு அரச அதிகாரிகள் விஜயம் செய்தனர்.

தனது நிறுவனத்துக்கு எதிராக தேசிய காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா – நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முறைப்பாடு செய்தமையினை அடுத்தே, அதற்குரிய அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக சபீஸ் தெரிவித்தார்.

மேலும், தனது நிறுவனம் தொடர்பில் பொய்யான தகவல்களை அதாஉல்லா வழங்கியுள்ளதாகவும் சபீஸ் ஏற்கனவே ஊடகங்களுக்குக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு, அக்கரைப்பற்றில் அமைந்துள்ள எம்.எஸ் லங்கா நிறுவனத்துக்கு – சில நாட்களுக்கு முன்னர், பல்வேறு அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகள் வருகை தந்து, முறைப்பாடு தொடர்பில் ஆராய்ந்ததாக சபீஸ் கூறினார்.

இதன்போது, தனது நிறுவனம் சட்ட ரீதியாக இயங்கி வருவதை அரச அதிகாரிகளிடம் சபீஸ் தெளிவுபடுத்தியதோடு, அரசியல் குரோதம் காரணமாகவே தனது நிறுவனத்துக்கு எதிராக முறைப்பாடுகள் முன்வைக்கப்படுவதாகவும் அதிகாரிகளிடம் தெளிவுபடுத்தியிருந்தார்.

தொடர்பான செய்தி: சபீஸுக்கு சொந்தமான ‘எம்.எஸ். லங்கா’ நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்: அதாஉல்லா எம்.பிதான் காரணம் என குற்றச்சாட்டு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்