பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் மகனிடம், போக்குவரத்துப் பொலிஸார் லஞ்சம் கோரியதாக குற்றச்சாட்டு

🕔 December 4, 2023

ண்டி – கலகெதர பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் மகனிடம் லஞ்சம் கோரியதாக ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சரின் மகன் – கண்டிக்குச் செல்லும் வழியில், வாகனத்தை முந்திச் செல்லும் போது போக்குவரத்து விதிகளை மீறியதமைக்காக போக்குவரத்து பொலிஸாரால் நிறுத்தப்பட்டார். இதனையடுத்து அமைச்சரின் மகன் போக்குவரத்து விதிமீறலை ஒப்புக்கொண்டு, வழங்கப்பட்ட அபராதத் தாளை ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், அமைச்சரின் மகன் – அபராதம் செலுத்த அருகில் உள்ள தபால் நிலையத்தை விசாரித்ததாக கூறப்படுகிறது.

எனினும், தண்டப்பத்திரைத்தை எழுதிய பொலிஸ் உத்தியோகத்தர், அமைச்சரின் மகனுக்கு உதவி செய்வதாகவும், அவர் தபால் நிலையத்திற்கு செல்லத் தேவையளில்லை எனவும் கூறியுள்ளார்.

இதனிடையே அவர் – பொதுப் பாதுகாப்பு அமைச்சரின் மகன் எனத் தெரிவித்ததோடு தான் செய்த குற்றத்துக்கான அபராதத் தாளை வழங்குமாறு வலியுறுத்தினார்.

இதனையடுத்து, அமைச்சரின் மகனிடம் அபராதம் செலுத்துவதற்காக பொலிஸார் 1,100 ரூபாயை பெற்றுக் கொண்டு, பொலிஸ் திணைக்களத்தின் மோட்டார் சைக்கிள் மூலம் அஞ்சல் அலுவலகத்துக்குச் சென்று அபராதம் செலுத்தி, அதற்கான ரசீதை அமைச்சரின் மகனுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்துடன் வழங்கியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்