“கோட்டா மற்றும் அரச அதிகாரிகள் சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளேன்”: றிஷாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு

🕔 December 1, 2023

ன்னை அநியாயமாக கைது செய்து தடுத்து வைத்தமைக்காக – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அரச அதிகாரிகள் சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இன்று (டிசம்பர் 01) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – பயங்கரவாத விசாரணைப் பிரிவின் (TID) பணிப்பாளருடன் இணைந்து, அவர்களின் அரசியல் லாபங்களுக்காக தன்னைக் கைது செய்து 05 வருடங்கள் சிறையில் வைத்திருக்க உத்தேசித்திருந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தனக்கு எதிராக பொய்யான சாட்சியஙகளை வழங்குமாறு,தான் அமைச்சராக இருந்தபோது தனக்கு கீழ் பணியாற்றிய அரச அதிகாரிகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகள் அச்சுறுத்தியதாகவும், ஆனால் அவர்கள் அவ்வாறு செய்ய மறுத்ததாகவும், இதன் காரணமாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் தான் விடுவிக்கப்பட்டதாகவும் றிஷாட் பதியுதீன் மேலும் கூறினார்.

பயங்காரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராக, அடுத்த வாரம் தான் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் அறிவித்துள்ளார்.

இந்த வழக்கின் மூலம் குறித்த நபர்களிடம் நஸ்டஈடு கோரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்