காஸாவில் போர் நிறுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து நடந்த தாக்குதலில் 109 பலஸ்தீனர்கள் இன்று பலி

🕔 December 1, 2023
காஸாவில் இன்று நடந்த தாக்குதலில் பலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டனர்

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம் இன்று (01) காலை முடிவடைந்துள்ள நிலையில், இஸ்ரேலின் தாக்குதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் பலஸ்தீன பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆகக்குறைந்தது 109 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் எனவும் அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், காஸாவிலுள்ள 200 இலக்குகளை இன்று தாம் தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே குண்டுத் தாக்குலுக்குள்ளான தெற்கு காஸாவின் சில பகுதிகளில் உள்ள மக்களை வெளியேறுமாறு கூறும் துண்டுப் பிரசுரங்களை -இஸ்ரேலிய ராணுவம் வீசியுள்ளது.

கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச மத்தியஸ்தர்கள் இடைக்கால போர் நிறுத்தத்தை தொடர்வதற்கு அழுத்தம் கொடுத்த போதிலும், இன்று வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 07 மணிக்கு போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது.

Comments