இஸ்ரேலின் தொடரும் நர வேட்டை: காஸாவில் வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் 200க்கும் மேற்பட்டோர் கொலை

🕔 December 2, 2023

ஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்தம் வெள்ளிக்கிழமை முடிவடைந்த பின்னர், காஸாவில் கிட்டத்தட்ட 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒக்டோபர் 07 ஆம் திகதிக்குப் பின்னர் அங்கு மொத்த உயிரிழப்பு 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

கான் யூனிஸ் மற்றும் ரஃபாவின் தெற்கு நகரங்கள் உட்பட, காஸா முழுவதும் பல இலக்குகளை இஸ்ரேலிய விமானங்கள் தாக்கியதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

அந்த பகுதியில் ஒரே இரவில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இஸ்ரேலிய இராணுவம் ரஃபாவை நோக்கி நகருமாறு அழைப்பு விடுக்கும் துண்டுப் பிரசுரங்களை வீசியுள்ளனர்.

இதேவேளை, எல்லைப் பாதுகாப்பு வேலிக்கு அருகில் இஸ்ரேலியர் வசிக்கும் பகுதிகளில் சைரன் சத்தம் ஒலிக்கவிடப்பட்டன. காஸாவிலிருந்து ரொக்கட் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் எனும் எச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது இவ்வாறிருக்க சிரிய தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் பல இடங்களில் நடத்தப்பட்டதாக சிரிய அரசு நடத்தும் செய்தி நிறுவனமான சனா தெரிவித்துள்ளது.

முன்னதாக தெற்கு லெபனானில் போராளிகளின் ஒரு பிரிவை தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.

Comments