அடாத்தாக கைப்பற்றப்பட்ட ‘பெற்ரிகலோ கெம்பஸ்’, ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைப்பு

அடாத்தாக கைப்பற்றப்பட்ட ‘பெற்ரிகலோ கெம்பஸ்’, ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைப்பு 0

🕔20.Sep 2023

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ‘பெற்ரிகலோ கெம்பஸ்’ (Batticaloa campus) இன்று புதன்கிழமை (20) ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பல்கலைக்கழத்திலிருந்து இன்று ராணுவம் வெளியேறியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை (19) முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் கெம்பஸை பொறுப்பேற்குமாறு உத்தரவிட்டிருந்தார் எனத்

மேலும்...
ஜனாதிபதி ரணில் மற்றும் நேபாள பிரதமருக்கிடையில் சந்திப்பு: கல்வி வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்து பேச்சு

ஜனாதிபதி ரணில் மற்றும் நேபாள பிரதமருக்கிடையில் சந்திப்பு: கல்வி வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்து பேச்சு 0

🕔20.Sep 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (20) நியூயோர்க் நகரில் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து இதன்போது இரு நாட்டுத் தலைவர்களும் நீண்ட நேரம் கலந்துரையாடினர். இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள இலங்கை

மேலும்...
நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 0

🕔20.Sep 2023

நியூசிலாந்தின் தெற்குப் பகுதியில் இன்று (20) காலை 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர் நேரம் காலை 9.14 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கேன்டர்பரி பகுதியில் உள்ள ஜெரால்டின் நகருக்கு வடக்கே 45 கிமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாக ‘ஜியோநெற்’ குறிப்பிடுகிறது. இது நியூசிலாந்தை தாக்கிய மிக சக்திவாய்ந்த

மேலும்...
‘அரகலய’ காலத்தில் சொத்துக்கள் சேதமாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 1414 மில்லியன் ரூபா நஷ்டஈடு

‘அரகலய’ காலத்தில் சொத்துக்கள் சேதமாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 1414 மில்லியன் ரூபா நஷ்டஈடு 0

🕔20.Sep 2023

ஆட்சியாளர்களுக்கு எதிராக கடந்த வருடம் இடம்பெற்ற‘அரகலய’ எனும் மக்கள் போராட்டத்தின் போது, சேதமாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்காக அரசாங்கம் வழங்க வேண்டிய நஷ்டஈடு 1,414 மில்லியன் ரூபா என அறிக்கைகள் கூறுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் 31 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நட்டஈடாக 714 மில்லியன் ரூபா ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. மேலும் 13 எம்.பி.க்களுக்கு முழு இழப்பீடு வழங்கவும்

மேலும்...
கிழக்கு ஆளுநர் செந்திலுக்கு எதிராக, ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்: பிக்குகள் களத்தில்

கிழக்கு ஆளுநர் செந்திலுக்கு எதிராக, ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்: பிக்குகள் களத்தில் 0

🕔19.Sep 2023

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும்  போராட்டத்தை கிழக்கின் பௌத்த பிக்குகள் ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக இன்று (19) காலைமுதல் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை தொடங்கியது. திருகோணமலை – நிலாவெளி பகுதியிலுள்ள பெரியகுளம் பொரலுகந்த ரஜமகா விகாரையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிப்பதை தவிர்க்குமாறு,

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்; “சஹ்ரானை கட்டுப்படுத்திய மற்றொரு நபர் இருந்தார்”: சிஐடி யின் முன்னாள் பொறுப்பதிகாரி ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்; “சஹ்ரானை கட்டுப்படுத்திய மற்றொரு நபர் இருந்தார்”: சிஐடி யின் முன்னாள் பொறுப்பதிகாரி ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு 0

🕔19.Sep 2023

ஈஸ்டர் தின தாக்குதலில் முன்னணி தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிமைக் கட்டுப்படுத்திய மற்றொரு நபர் இருந்தார் என, குற்றப் புலனாய்வு பிரிவுக்குப் பொறுப்பாக இருந்து ஓய்வுபெற்ற சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ரவிசெனரட்ண  தெரிவித்துள்ளார். “அந்த நபர் மிகவும் புத்திசாலி, இலங்கையில் முதன்முதலில் ஒருங்கிணைந்த பயங்கரவாத தாக்குதலை ஏற்பாடு செய்யும் திறன் பெற்றவர்” எனவும் ரவி செனவிரட்ன

மேலும்...
மாற்றுத் திறனாளிகளை வலுவூட்டி, பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டம்: ராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் விபரிப்பு

மாற்றுத் திறனாளிகளை வலுவூட்டி, பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டம்: ராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் விபரிப்பு 0

🕔19.Sep 2023

மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டுவதன் மூலம் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு அவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் ராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார். மேலும், நாட்டில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக புதிய சட்டமூலமொன்றை இவ்வருடம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில்

மேலும்...
திலீபனின் நினைவு ஊர்வலத்தை சிங்களப் பிரதேசம் ஊடாக கொண்டு சென்றமை நல்லிணக்கத்துக்கு குந்தகமான செயல்: கிழக்கு ஆளுநர் செந்தில் கண்டனம்

திலீபனின் நினைவு ஊர்வலத்தை சிங்களப் பிரதேசம் ஊடாக கொண்டு சென்றமை நல்லிணக்கத்துக்கு குந்தகமான செயல்: கிழக்கு ஆளுநர் செந்தில் கண்டனம் 0

🕔19.Sep 2023

திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் – நாடாளுமன்ற உறுப்பினரால்,பொலிஸ் அனுமதி இன்றி, சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்தை ஊடுருவி சென்றமை இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை இல்லாமல் ஆக்கும் செயல் என, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில் தனக்கு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
நாடாளுமன்ற சபையில் ஆடை கழற்றிய அமைச்சர் தொடர்பில், சபாநாயகரிடம் முறைப்பாடு

நாடாளுமன்ற சபையில் ஆடை கழற்றிய அமைச்சர் தொடர்பில், சபாநாயகரிடம் முறைப்பாடு 0

🕔19.Sep 2023

முறையற்ற ஆடையுடன் அமைச்சர் ஒருவர் நாடாளுமன்ற சபைக்குள் அண்மையில் பிரவேசித்த நிலையில், அவர் தனது அங்கியை அங்கேயை கழற்றியதாக, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று (19) சபையில் குற்றஞ்சாட்டினார். எனவே இந்த அநாகரீகமான செயலுக்கு எதிராக, குறித்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் அவர் கோரிக்கை விடுத்தார். சுகாதார

மேலும்...
திலீபன் நினைவு நிகழ்வு தொடர்பில் கோட்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

திலீபன் நினைவு நிகழ்வு தொடர்பில் கோட்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு 0

🕔19.Sep 2023

உண்ணாவிரதம் இருந்து மரணித்த புலிகள் அமைப்பின் உறுப்பினர் திலீபனின் நினைவு தின நிகழ்வுகளை கொழும்பு – கோட்டையை அண்மித்த பகுதிகளில் முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் தடையுத்தரவுபிறப்பித்துள்ளது. குறித்த நினைவு தின நிகழ்வின, 1987ஆம் ஆண்டுக்கு பின்னர் கொழும்பில் முதற்தடவையாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக புலனாய்வு பிரிவினர் தங்களுக்கு அறியப்படுத்தியுள்ளதாக பொலிஸார் இன்று (19) நீதிமன்றில் கூறி, அதற்கு

மேலும்...
கஜேந்திரன் எம்.பி உள்ளிட்டோரை தாக்கியவர்களுக்கு விளக்க மறியல்

கஜேந்திரன் எம்.பி உள்ளிட்டோரை தாக்கியவர்களுக்கு விளக்க மறியல் 0

🕔18.Sep 2023

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 14 பேர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது  செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களை விளக்கமறியில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் சந்தேக நபர்கள் இன்று (18) ஆஜர்செய்ப்பட்டபோது இந்த உத்தரவு வழங்கப்பட்டது. இதன்படி சந்தேக நபர்கள் எதிர்வரும்

மேலும்...
க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்தி வைக்கப்படும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்தி வைக்கப்படும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு 0

🕔18.Sep 2023

க.பொ.த உயர்தரப் பரீட்சை இவ்வருடம் நொவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், அதனை ஒத்தி வைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக – ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். தனது உத்தியோக உத்தியோகபூர்வ ‘பேஸ்புக்’ பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நொவம்பரில் நடைபெறவிருந்த 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கும் தீர்மானம் ஏற்கனவே

மேலும்...
கஜேந்திரன் எம்.பி மீது நடத்தப்பட்ட ‘வெட்கக் கேடான’ தாக்குதலுக்கு சுமந்திரன் கண்டனம்: நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை

கஜேந்திரன் எம்.பி மீது நடத்தப்பட்ட ‘வெட்கக் கேடான’ தாக்குதலுக்கு சுமந்திரன் கண்டனம்: நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை 0

🕔18.Sep 2023

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனை தாக்கிய குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். உண்ணா விரதமிருந்து மரணித்த – புலிகள் இயக்க உறுப்பினர் திலீபனின் நினைவு தினைத்தையொட்டி, அவரின் சிலையுடன் வாகனத்தில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாதோர் துப்பாக்கி சூடு

நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாதோர் துப்பாக்கி சூடு 0

🕔18.Sep 2023

அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் அநுராதபுர விமான நிலைய வீதியிலுள்ள வீட்டுக்கு அருகில் வைத்து நேற்றிரவு (17) அடையாளம் தெரியாதோரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.  இதன்போது, எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது வேனில் வந்த சிலர் இரவு 10.45

மேலும்...
கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினரின் அசட்டைக்கு எதிராக சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டம்

கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினரின் அசட்டைக்கு எதிராக சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டம் 0

🕔18.Sep 2023

– பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர், எஸ். அஷ்ரப்கான் – சாய்ந்தமருதில் கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினர் கடலரிப்பபைத் தடுப்பதற்கு எனத் தெரிவித்து – பாரிய முண்டுக் கற்களை மீன் பிடி நடவடிக்கைகளுக்காகப் போக்குவரத்து செய்யும் பாதையில் போட்டுவிட்டு, பல நாட்கள் கடந்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதைக் கண்டித்து, இன்று (16) மீனவர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்