திலீபன் நினைவு நிகழ்வு தொடர்பில் கோட்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

🕔 September 19, 2023

ண்ணாவிரதம் இருந்து மரணித்த புலிகள் அமைப்பின் உறுப்பினர் திலீபனின் நினைவு தின நிகழ்வுகளை கொழும்பு – கோட்டையை அண்மித்த பகுதிகளில் முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் தடையுத்தரவுபிறப்பித்துள்ளது.

குறித்த நினைவு தின நிகழ்வின, 1987ஆம் ஆண்டுக்கு பின்னர் கொழும்பில் முதற்தடவையாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக புலனாய்வு பிரிவினர் தங்களுக்கு அறியப்படுத்தியுள்ளதாக பொலிஸார் இன்று (19) நீதிமன்றில் கூறி, அதற்கு தடையுத்தரவு கோரினர்.

இதனைப் பரிசீலித்த கொழும்பு – கோட்டை நீதவான் திலின கமகே, திலீபனின் நினைவு நிகழ்வை முன்னெடுப்பதற்கு தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன்படி, மருதானை, கொள்ளுப்பிட்டி, கொம்பனித்தெரு, கோட்டை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நிகழ்வை அனுஸ்டிப்பதற்கு, கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தை சேர்ந்த அருட்தந்தை சக்திவேல் உள்ளிட்ட தரப்பினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காலிமுகத்திடல், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதியமைச்சு உள்ளிட்ட பகுதிகளுக்குள் – குறித்த தரப்பினர் பிரவேசிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்