க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்தி வைக்கப்படும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு
க.பொ.த உயர்தரப் பரீட்சை இவ்வருடம் நொவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், அதனை ஒத்தி வைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக – ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோக உத்தியோகபூர்வ ‘பேஸ்புக்’ பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நொவம்பரில் நடைபெறவிருந்த 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கும் தீர்மானம் ஏற்கனவே கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர், இவ்விடயம் இறுதி செய்யப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.